மிகுந்த அயர்ச்சிக்கே இழுத்துவந்துவிட்டாய்
நூலறுந்த பட்டமொன்றின்
திசையறியும் நோக்கோடு கிளம்பிய
பாதங்களில்
காட்டுப் பாதை வேர்பிடித்த சூட்சுமம்
அறியா கணங்களில்
அவிழ்ந்து கிடக்கும் முடிச்சுகள்
தெளிவற்ற தெளிவின்
நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டுவதாய்
இங்கே
குற்றங்கள் குறித்தோ
குறைபட்ட மனதின் காயங்கள் குறித்தோ
வழக்காட வாய்ப்பற்ற நியாயத்தின் மன்றத்தில்
நீதியென்பது
வன்புணர்வுக்கு உள்ளாகும்
ஊமைச் சிறுமியின் உதிரப்போக்கு
கறைகள் குறித்தான சாட்சியங்களில்
மொய்க்கும் கருணையின் மீது புகார்களற்ற படி
கடந்து போகும் காற்றில்
வலுக்கத் தொடங்கியிருக்கிறது
புயல்
சாய்த்துப் பார்க்கும் சாத்தியங்களோடு.
-ரேவா
நூலறுந்த பட்டமொன்றின்
திசையறியும் நோக்கோடு கிளம்பிய
பாதங்களில்
காட்டுப் பாதை வேர்பிடித்த சூட்சுமம்
அறியா கணங்களில்
அவிழ்ந்து கிடக்கும் முடிச்சுகள்
தெளிவற்ற தெளிவின்
நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டுவதாய்
இங்கே
குற்றங்கள் குறித்தோ
குறைபட்ட மனதின் காயங்கள் குறித்தோ
வழக்காட வாய்ப்பற்ற நியாயத்தின் மன்றத்தில்
நீதியென்பது
வன்புணர்வுக்கு உள்ளாகும்
ஊமைச் சிறுமியின் உதிரப்போக்கு
கறைகள் குறித்தான சாட்சியங்களில்
மொய்க்கும் கருணையின் மீது புகார்களற்ற படி
கடந்து போகும் காற்றில்
வலுக்கத் தொடங்கியிருக்கிறது
புயல்
சாய்த்துப் பார்க்கும் சாத்தியங்களோடு.
-ரேவா
1 கருத்துகள்:
வணக்கம்
நல்ல கருத்தோட்ட உள்ள கவிதை பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்துரையிடுக