உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

தச்சன்



மனக்கதவின் க்ரீச் சத்தம்
திறந்து மூடும் பொழுதுக்கெல்லாம்
பல் நரம்பறுக்கும் வலியோடு  சாத்திக்கொள்வது
சகிக்கமுடியாததாகிறது

அணைந்து கிடக்கும் மாடவிளக்கில்
சாவித் துவாரம் வழியாய் திரியேற்றுகிற வெயில்
இருப்பதை தங்கமென வரைந்துக்காட்ட


விலையேற்ற நினைவுகளை சரிசெய்ய
தச்சன் வருகிறார் அலைப்பேசி வழியாய்


0 கருத்துகள்: