*
மன்றாடலின் நிறம் குறித்து வருத்தப்பட தேவையில்லை
வெள்ளை விருப்ப நிறமென்றான பின்
கரிக் குளித்துப் போயிருக்கும் வாதங்கள்
சபையேறப் பெய்யும் மழை
பாலை பெற்ற பருவ சாபம்
பரீட்சயமற்ற ஈச்சை நிழல்
புறங்கை அனத்தும் மெளன நெருடல்
சிராய்ப்பில் சிக்கித் தவிப்பதாய் கோரிக்கையின் துயரம்
அடங்க மறுக்கின்ற அளவில்
வேதனை மயிர்கால்களை எரிப்பதாய்
வெயில்
விட்டு விலகி நடக்க முடிவதுமில்லை
தொடர்வதில் தீப்பற்றி எரியும் நாடகங்கள்
போர் தந்திரப் புறமுதுகில் குத்தும் வார்த்தைக் கத்தி
வழியும் நினைவை நிறுத்த முனைந்து
தோற்கும் உரிமை
குறைபட்டுக் கொள்ள முடியவுமில்லை
குற்றுயிராய் கிழக்கின் காலம்
திறந்து விடும் இருளின் கையில்
துளி ஒளியாய் மன்றாடல் மெழுகின் நடனம்
உருகி வழியும் வெளிச்சப் பழுப்பைக் குறித்து
இனி வருத்தப்பட தேவையில்லை
-ரேவா
நன்றி : கணையாழி (மார்ச்-15/2015)
Painting : Josiane Childers
புறங்கை அனத்தும் மெளன நெருடல்
சிராய்ப்பில் சிக்கித் தவிப்பதாய் கோரிக்கையின் துயரம்
அடங்க மறுக்கின்ற அளவில்
வேதனை மயிர்கால்களை எரிப்பதாய்
வெயில்
விட்டு விலகி நடக்க முடிவதுமில்லை
தொடர்வதில் தீப்பற்றி எரியும் நாடகங்கள்
போர் தந்திரப் புறமுதுகில் குத்தும் வார்த்தைக் கத்தி
வழியும் நினைவை நிறுத்த முனைந்து
தோற்கும் உரிமை
குறைபட்டுக் கொள்ள முடியவுமில்லை
குற்றுயிராய் கிழக்கின் காலம்
திறந்து விடும் இருளின் கையில்
துளி ஒளியாய் மன்றாடல் மெழுகின் நடனம்
உருகி வழியும் வெளிச்சப் பழுப்பைக் குறித்து
இனி வருத்தப்பட தேவையில்லை
-ரேவா
நன்றி : கணையாழி (மார்ச்-15/2015)
Painting : Josiane Childers
0 கருத்துகள்:
கருத்துரையிடுக