புழங்கியதால் படிந்த கறைக்கு
சொற் சாம்பல் எடுக்கிறாய்
பிசுப்பிசுப்பின் ஈரம் ஒட்டிக்கொண்ட
காத்திருப்பின் வடுக்களை
ஈரம் கொண்டே துலக்கும் லாகவத்தில்
பழைய நிலைக்கு முடுக்கி விடும்
தொனி தெரிய
உரையாடல் இடைவெளியில்
சுத்தமாய் கழுவி அடுக்கி வைத்த
ஒரு கதாப்பத்திரம் சாம்பல் பூசிச் சிரிக்கிறது
-ரேவா
சொற் சாம்பல் எடுக்கிறாய்
பிசுப்பிசுப்பின் ஈரம் ஒட்டிக்கொண்ட
காத்திருப்பின் வடுக்களை
ஈரம் கொண்டே துலக்கும் லாகவத்தில்
பழைய நிலைக்கு முடுக்கி விடும்
தொனி தெரிய
உரையாடல் இடைவெளியில்
சுத்தமாய் கழுவி அடுக்கி வைத்த
ஒரு கதாப்பத்திரம் சாம்பல் பூசிச் சிரிக்கிறது
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக