*
வாசல் வரை வா
கைகுலுக்கு
நலம் விசாரி
முடிந்தால் முன்நெற்றி முத்தம் இடு
ஈரம் காய்வதற்குள் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளை
ஒன்றுவிடாமல் ஒட்டிப் போ
தடங்களைத் தேடுபவர்களுக்கு அது பயன்படட்டும்
குறைசொல்வது குணச்சாயல் என்றான பின்
புறக்கணிப்பிற்கு புறமுதுகு எதற்கு
வாசல் வரை வா
-ரேவா
ஒன்றுவிடாமல் ஒட்டிப் போ
தடங்களைத் தேடுபவர்களுக்கு அது பயன்படட்டும்
குறைசொல்வது குணச்சாயல் என்றான பின்
புறக்கணிப்பிற்கு புறமுதுகு எதற்கு
வாசல் வரை வா
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக