*
மனம் பிறழ்ந்தவளைப் போல் முன் நிற்கிறேன்
சிரிப்பால் என்னை கழுவு
சீழ் வடியும் ப்ரியத்திற்கு தொடுகையில் கட்டிடு
காயமாறாது விம்மும் வார்த்தைகளுக்குப் புன்னகையை பரிசளி
வளர்ந்திருக்கும் நகங்களின் அழுக்கேறிய ரகசியகங்களை வெட்டு
நிதானி
மொழிப் பழக்கு
மெளனம் படர்த்தும் இருளை அகற்று
கூடல் திரியேற்று
வெளிச்சம் வார்த்தைகளாக
வார்த்தைகள் ஓசையாக
ஓசை ஓவியமாக
ஓவியம் அசைவாக
அசைவுகள் செய்கையாக
செய்கை ஆதியாக
நம் நதியிருந்த அந்த கூழாங்கல்லை கண்டெடு
மீட்டெடுத்தலுக்கான அவசியம் வந்ததின் காரணத்தில் மூழ்கு
முத்தென்பது மீட்க முடியா காரணத்தின் ஆழத்திலும்
உண்டென்பதை உணர்
கிழிந்த ஆடையின் தைந்துபோன உரையாடலுக்கு செவி சாய்
பிடித்துவைத்திருத்தல் பிரியமென்ற கட்டுடை
பறக்கவிட்டு பக்கத்தில் இரு
கூடென்பது காடென்ற எண்ணத்தை வளர்
கட்டற்ற சுதந்திரத்தின் மீதிருக்கும் இம்மனப்பிறழ்வை
கைபற்றி அழைத்துப் போ
வானம் வனாந்தரமாக கிளைவிரிக்கும்
இப்பாதையில் மீண்டும் பயணிப்போம்
ஓர் ஆதி விதையாக
அம்மட்டும்
மனம் பிறழ்ந்தவளைப் போலே நிற்கிறேன்
-ரேவா
painting :christine-wasankari
மொழிப் பழக்கு
மெளனம் படர்த்தும் இருளை அகற்று
கூடல் திரியேற்று
வெளிச்சம் வார்த்தைகளாக
வார்த்தைகள் ஓசையாக
ஓசை ஓவியமாக
ஓவியம் அசைவாக
அசைவுகள் செய்கையாக
செய்கை ஆதியாக
நம் நதியிருந்த அந்த கூழாங்கல்லை கண்டெடு
மீட்டெடுத்தலுக்கான அவசியம் வந்ததின் காரணத்தில் மூழ்கு
முத்தென்பது மீட்க முடியா காரணத்தின் ஆழத்திலும்
உண்டென்பதை உணர்
கிழிந்த ஆடையின் தைந்துபோன உரையாடலுக்கு செவி சாய்
பிடித்துவைத்திருத்தல் பிரியமென்ற கட்டுடை
பறக்கவிட்டு பக்கத்தில் இரு
கூடென்பது காடென்ற எண்ணத்தை வளர்
கட்டற்ற சுதந்திரத்தின் மீதிருக்கும் இம்மனப்பிறழ்வை
கைபற்றி அழைத்துப் போ
வானம் வனாந்தரமாக கிளைவிரிக்கும்
இப்பாதையில் மீண்டும் பயணிப்போம்
ஓர் ஆதி விதையாக
அம்மட்டும்
மனம் பிறழ்ந்தவளைப் போலே நிற்கிறேன்
-ரேவா
painting :christine-wasankari
0 கருத்துகள்:
கருத்துரையிடுக