இருண்மையின் கையில்
துளிப்பார்வை வெளிச்சத்தோடு அமர்ந்திருக்கிறாய்
பார்க்க சற்றே தயக்கமாயிருந்தாலும்
அடிமனதில் நிறைந்து வெளியேரும் கேள்வியின் இருட்டுக்கு
தேவையாய் இருக்கிறது அப்பார்வை
மிகநிதானமாய் தவழ்ந்து வருகின்ற பதிலில்
முடிவிலியின் கணங்களொன்று முடிவுக்கு வருவதாய்
நம்பச்சொல்கிறது அறிவிப்பு
வேறென்ன
நம்பிக்கையின் யன்னல் திறந்து பறக்கவிடுகிறேன்
கனவுப் பறவையின் சிறகினை பிடுங்கி

0 கருத்துகள்:
கருத்துரையிடுக