விலகிப் போய்விடும் கணத்திற்காய் அடுக்குகிறாய்
வட்ட வட்டத் தட்டுகளில் காரணங்களை
மேசையின் மீதேறும் ஒவ்வொரு காரணத்திலும்
ஓசையெழுப்பி உட்கார்ந்துக்கொள்கிற தட்டு
கூடுதல் எடைக் கொடுத்து
முகம் மறைத்து
நிரம்பும் விவாதத்தின் நுனிச் சறுக்கலில்
தவறி விழுந்த அத்தனையும்
விதவிதமான ஒலியோடு
கலைந்தழ
அதிர்ந்து நொறுங்கியது மேசை
- ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக