*
இரண்டில் ஒன்று பார்த்தாக வேண்டிய கட்டாயத்திற்கு
கையுறை அணிவித்து அழகு பார்க்கிறாய்
களவு போன ரேகைகளிலிருந்து
கசிந்துவிட்ட ஆயுளை
அது மீட்டெடுக்க உதவுவதாய் நம்புகிறாய்
அசெளகர்யப்படுத்தும் காத்திருப்பு
கசகசக்கச் செய்யும் காலத்தை
கழற்றி எறியும் படி செய்கிற அமைதியில்
ஆளற்ற தீவு
பெறுவதும் தருவதும் அர்த்தமற்றவைகளின்
அனாமத்து கணக்காகி
நிகர்செய்ய முடியா பிழையாகையில்
கையுறைக்குள் வியர்த்துக் கொண்டிருக்கும்
முடிவை திறந்துவிடுகின்றாய்
ஏற்றுக்கொள்வதன் பொருட்டு திறந்திருக்கும் வாசலில்
நுழைந்து கொள்கின்ற தருணங்கள்
தனிமைக்கென்று
கையுறை அழுத்த எங்கோ எழுதப்பட்டுவிட்டன
-ரேவா
painting : LaurenWadkins
கசிந்துவிட்ட ஆயுளை
அது மீட்டெடுக்க உதவுவதாய் நம்புகிறாய்
அசெளகர்யப்படுத்தும் காத்திருப்பு
கசகசக்கச் செய்யும் காலத்தை
கழற்றி எறியும் படி செய்கிற அமைதியில்
ஆளற்ற தீவு
பெறுவதும் தருவதும் அர்த்தமற்றவைகளின்
அனாமத்து கணக்காகி
நிகர்செய்ய முடியா பிழையாகையில்
கையுறைக்குள் வியர்த்துக் கொண்டிருக்கும்
முடிவை திறந்துவிடுகின்றாய்
ஏற்றுக்கொள்வதன் பொருட்டு திறந்திருக்கும் வாசலில்
நுழைந்து கொள்கின்ற தருணங்கள்
தனிமைக்கென்று
கையுறை அழுத்த எங்கோ எழுதப்பட்டுவிட்டன
-ரேவா
painting : LaurenWadkins
0 கருத்துகள்:
கருத்துரையிடுக