உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 16 மே, 2015

வலியில் திறக்கும் மெளனம்



கடந்து போவதற்குரிய வழியொன்றை
அமைத்துத் தருகிறாய்

நீள அகலங்கள் வசதிப்படாத இருப்பில்
எனதறையைக் காலி செய்யச் சொல்கின்ற
மெளனத்திடம்
பேசிச் சலிப்புற்ற வார்த்தைகளை
புது விலாசம் தேடச் சொல்லி
நிர்பந்திக்கிறாய்

ஈரங்கள் உலர்ந்ததும்
கிளம்பிவிடுவதாய் சொல்லும் உரையாடலுக்கு
காதுகொடுக்காது கதவடைக்கும்
மெளனமே
புதிய இலக்கத்தை எழுதிவிட

கடந்துபோவதற்குரிய வழியொன்றை
நீயே திறந்தும் விடுகிறாய்

- ரேவா
painting : GabalGabow
நன்றி :கீற்று.காம் (20.09.14)

0 கருத்துகள்: