உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 12 மே, 2015

இளைப்பாறும் ஒரு சொல்லின் அந்தி


*
திரும்பப் பெறமுடியா காலங்கள்
நிறமாறிப் பெய்கின்ற நிலத்தில்
உலருவதாய் இல்லை ஒரு சொல்


எதிர்க்கேள்விகள் எழுப்ப ஏங்கும் நொடிகளில்
பற்றிக்கொள்ளும் பதற்றம்
விற்றுத் தீர்ந்த வசவில்
பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கம் 


திரும்பிட முடியாதவைகளின்
கையறுநிலை பூணும் கழிவிரக்கத்தை
நேர்கோடுகளாக்கி வரையும் ஈரத்தில்
கோடையின் வெம்மை


எழுதும் கணத்தின் நிழல் வளர்க்கும் குளிரில்
கூடுகட்டிக்கொண்ட சொல்லுக்குள்
அந்தியின் அமைதி


-ரேவா

0 கருத்துகள்: