*
சட்டென்று முளைக்கும் வார்த்தைகள்
வாதங்களுக்குரியதாய் மாறும் கணத்தின்
தலைபிடித்து உட்கார்ந்திருக்கிறோம்
வெளிவந்துவிட்ட தவறுதலின் ஒட்டு மொத்தம்
உரிமை கொண்டாடும் நொடிகளை
அழித்திடத் துடிக்கும் போராட்டத்தில்
பருவம் தப்பிப் பெய்த மழையின் உஷ்ணம்
அனலெழுப்பும் ஞாபகங்கள் கூட்டும் கனகனப்பில்
மின் மயானத்தின் பேரமைதி
கட்டப்பட்ட உரையாடலின் கால்கள்
நகர மறுக்கின்ற நிமிடங்களில் சூழும் மெளனத்தை
நொடியில் சாம்பலாக்கித் தரும் பயணத்தில்
துணையற்ற கால்கள்
-ரேவா
உரிமை கொண்டாடும் நொடிகளை
அழித்திடத் துடிக்கும் போராட்டத்தில்
பருவம் தப்பிப் பெய்த மழையின் உஷ்ணம்
அனலெழுப்பும் ஞாபகங்கள் கூட்டும் கனகனப்பில்
மின் மயானத்தின் பேரமைதி
கட்டப்பட்ட உரையாடலின் கால்கள்
நகர மறுக்கின்ற நிமிடங்களில் சூழும் மெளனத்தை
நொடியில் சாம்பலாக்கித் தரும் பயணத்தில்
துணையற்ற கால்கள்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக