*
தவறுதலைப் போல் தப்பித்துக்கொள்தல்
அவ்வளவு சுலபமாகிவிடுவதில்லை
தினத்தின் மீதேறும் கனவும்
இறந்ததின் மீதேறி காட்சிப்பிழையாக்கும் எறும்பும்
சாயலில் ஒன்றென்று புரியப்போவதுமில்லை
நகர்வுகள் திடமற்று இருப்பதில்
தொலைவுகள் சோதனை ஓட்டம்
முடியாததின் ஆரம்பம்
முயற்சியின் தினங்களை தின்று குவிக்கிறது
ஒரு ராட்சஷ மலையென
ஏழு மலை
ஏழு கடல்
எத்தனையோ கதைகள் ஏறிவந்த பின்னும்
உச்சிகாணாத முதல் மலை
மூட்டு வலி காண வைக்கும் ஆரோக்கியத்தை
கேள்வி எழுப்புகையில்
தப்பித்துக்கொள்தல் அவ்வளவு சுலபமாகிவிடுவதில்லை
-ரேவா
இறந்ததின் மீதேறி காட்சிப்பிழையாக்கும் எறும்பும்
சாயலில் ஒன்றென்று புரியப்போவதுமில்லை
நகர்வுகள் திடமற்று இருப்பதில்
தொலைவுகள் சோதனை ஓட்டம்
முடியாததின் ஆரம்பம்
முயற்சியின் தினங்களை தின்று குவிக்கிறது
ஒரு ராட்சஷ மலையென
ஏழு மலை
ஏழு கடல்
எத்தனையோ கதைகள் ஏறிவந்த பின்னும்
உச்சிகாணாத முதல் மலை
மூட்டு வலி காண வைக்கும் ஆரோக்கியத்தை
கேள்வி எழுப்புகையில்
தப்பித்துக்கொள்தல் அவ்வளவு சுலபமாகிவிடுவதில்லை
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக