எப்படியும் திரும்பி வந்திடுவாய்
எனும் அலட்சியத்தில்
ஆளற்ற தீவொன்றை உருவாக்கத் தொடங்கிவிட்டாய்
கண நேர யுத்தம்
கவனிக்கத் தவறிய காயம்
நிறுத்தியிருக்கும் இடம்
மன்னிப்பை மறுதலித்த
வெற்றியில் பெற்ற நரகமென்றுனக்குத் தெரிய
நேரம் பிடிக்கும்
கண்ணீரின் உவர்ப்போ
உரையாடல்கள் உடைத்த பிம்பங்களோ
கட்டுமானங்கள் தகர்ந்த நிமிடங்களின் புகைமூட்டமோ
கர்வப் புரை கூடி மறைக்கும்
உன் கண்களுக்குத் தெரியப் போவதில்லை
நீ வாகை மலர் பூத்துக் குலுங்கும்
தோட்டத்தில் இருக்கிறாய்
வெயில் பொழுதுகள் வேர்பிடித்திருப்பதை
அறியாது
வாடும் பொழுதுகளில் நீருற்றவோ
மலரும் கொண்டாட்டங்களில்
உன்னை நிறுத்தி வாழ்த்துச் சொல்லி
வாகை மலர் சூடவோ
வாய்க்காத தீவுனது
நீயே உன்னைத் துதி
உன் வெற்றி மீது ஏறி கொக்கரி
விடிவதற்கான பொழுதுகள் திரும்பி வரப்போவதில்லை
நீ
எப்படியும் திரும்பிவிடுவார்கள்
எனும் அலட்சியத்தில்
ஆளரற்ற தீவொன்றை உருவாக்கத் தொடங்கிவிட்டாய்
-ரேவா
எனும் அலட்சியத்தில்
ஆளற்ற தீவொன்றை உருவாக்கத் தொடங்கிவிட்டாய்
கண நேர யுத்தம்
கவனிக்கத் தவறிய காயம்
நிறுத்தியிருக்கும் இடம்
மன்னிப்பை மறுதலித்த
வெற்றியில் பெற்ற நரகமென்றுனக்குத் தெரிய
நேரம் பிடிக்கும்
கண்ணீரின் உவர்ப்போ
உரையாடல்கள் உடைத்த பிம்பங்களோ
கட்டுமானங்கள் தகர்ந்த நிமிடங்களின் புகைமூட்டமோ
கர்வப் புரை கூடி மறைக்கும்
உன் கண்களுக்குத் தெரியப் போவதில்லை
நீ வாகை மலர் பூத்துக் குலுங்கும்
தோட்டத்தில் இருக்கிறாய்
வெயில் பொழுதுகள் வேர்பிடித்திருப்பதை
அறியாது
வாடும் பொழுதுகளில் நீருற்றவோ
மலரும் கொண்டாட்டங்களில்
உன்னை நிறுத்தி வாழ்த்துச் சொல்லி
வாகை மலர் சூடவோ
வாய்க்காத தீவுனது
நீயே உன்னைத் துதி
உன் வெற்றி மீது ஏறி கொக்கரி
விடிவதற்கான பொழுதுகள் திரும்பி வரப்போவதில்லை
நீ
எப்படியும் திரும்பிவிடுவார்கள்
எனும் அலட்சியத்தில்
ஆளரற்ற தீவொன்றை உருவாக்கத் தொடங்கிவிட்டாய்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக