உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

திரும்ப முடியா தூரத்தின் நேசம்




உன்னோடிருந்த பொழுதுக்கான நியாயங்களைத் திரட்டிக்கொண்டு
இங்கிருந்து கடந்து போகிறேன்

இனி
நீ
மது அருந்தலாம்
வேசிகளோடு நட்பு வைக்கலாம்
கூடிக்கிடந்த நமதறைக்கு வேறு வர்ணம் கொடுத்து
மாற்றி வைக்கலாம்
அப்படியே உன் தொலைபேசி எண்ணையும்

திரும்பவே முடியாத நேசத்தின் தூரத்திற்கு
போன பிறகு
நீ
தொலைந்து போ

சுற்றும் பூமி உன்னை என்னிடம் காட்டா வண்ணம்
சுற்றித் தொலைக்கட்டும்

-ரேவா

0 கருத்துகள்: