குவளை முட்டும் தேனீரில்
மிதந்து கொண்டிருக்கிறது உன் நினைவு
கதகதப்பைக் கொடுத்தபடி
காத்திருத்தலின் ஆடை விழுகையில்
விரலெடுத்து நீக்கி விடுகின்ற பாவனையில்
இன்னும் மிச்சமிருக்கிறது
குடிக்க முடியா ப்ரியத்தின் சூடு
அனலாடி வளைந்து மேலெழும்பும்
ஆவியத்தனையிலும் அடர்ந்திருக்கிறது
அவரவர்க்கான நியாயம்
ஒற்றை மிடறில் முடிகிற
சுவாரஸ்யத்தை
காரணங்கள் ஏதுமின்றி தட்டிவிடுகிறேன்
போதுமாயிருக்கிறது இக்கதகதப்பு
பருகவும்
பருகியதிலிருந்து பிழைக்கவும்
மிதந்து கொண்டிருக்கிறது உன் நினைவு
கதகதப்பைக் கொடுத்தபடி
காத்திருத்தலின் ஆடை விழுகையில்
விரலெடுத்து நீக்கி விடுகின்ற பாவனையில்
இன்னும் மிச்சமிருக்கிறது
குடிக்க முடியா ப்ரியத்தின் சூடு
அனலாடி வளைந்து மேலெழும்பும்
ஆவியத்தனையிலும் அடர்ந்திருக்கிறது
அவரவர்க்கான நியாயம்
ஒற்றை மிடறில் முடிகிற
சுவாரஸ்யத்தை
காரணங்கள் ஏதுமின்றி தட்டிவிடுகிறேன்
போதுமாயிருக்கிறது இக்கதகதப்பு
பருகவும்
பருகியதிலிருந்து பிழைக்கவும்
*
ரேவா
நன்றி : கல்கி இதழ்
நன்றி : கல்கி இதழ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக