உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

சிறகில் ஒளிரத் தொடங்கிய இருள்




முடியவில்லை எனும் போது
முடித்துக் கொள்வதின் தீவிரத்தில்
விழித்திருக்கிறாய் என்னோடு

பளபளக்கும் கத்தி தான்
சிறகு பூட்டி விடுகிறது
கை மணிக்கட்டுக்கு

உறக்கமற்று விழித்திருக்கும் இரவும்
இனியொரு உறவுமில்லையென
வெளிச்சம் தொலைத்த இருளும்
ஒன்றென உணர்ந்து
தாழ் நீக்கி விடுகிறேன்

கொஞ்சம் தூரமே
சிவப்பின் சிறகு
உயரப் பறக்கும் துயரத்தின் பின்
பெரிய வானம்

-ரேவா

ஒவியம் :fatma abdullah lootah 


நன்றி : (கீற்று.காம் 15-05-14)

0 கருத்துகள்: