எதற்கும் அலட்டிக் கொள்ளா இருப்பின் அறைக்கதவை
திறந்து கொள்ளச் செய்யும் பொருட்டு
சத்தமெழுப்பிய உன் வருகையின் வாசலிலே
நின்று கொண்டிருக்கிறேன்
எதற்கும் அஞ்சுவதாயில்லை நீ
எதையும் அனுமதிப்பதாயில்லை நான்
சட்டென இழுத்து மூடும் முன்
உன் அனுமதியில் அரவம் பதுங்கும் லாகவம்
பேச்சின் அனல் சீற்றம்
வார்த்தையின் இரட்டை நாவை வெளிக்காட்டி விட
மறைத்தலெனும் ஓர் அபத்த தாளம்
எதன் பொருட்டோ அறைக் கதவின் தாழ்ப்பாளாகி
எனதறையை கெட்டிப்பாக்கிட இசைகையில்
எவர்க்கும் அனுமதியில்லை என்பதன் பொருட்டு
முடிகிறாய் நீ
உன் வருகையோடே
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக