உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 12 மே, 2015

குறைந்த வெளிச்சத்தின் உரையாடல் நீட்சி


*
ஓர் இரவைக் கடப்பது
கடந்து வந்த எல்லா இருளையும் விட நீளமானது


அடர்த்தியின் அதிகபட்சம் வரை சென்றிடும் அதற்குள்
மூடிய புத்தனின் கண்கள்


கிடைப்பதை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கும்
நியுரானின் முதிர்ச்சி

அறிவைத் தாண்டும் லெவல் கிராசிங்கிற்கு
பொருந்திப் போக முடிவதில்லை


தாண்டிடத் தூண்டும் போராட்டத்தில்
உரையாடலின் ஈர வெளிச்சம் கொடுக்கிறது
ஓர் அணையா விளக்கை


கடந்துப் பார்ப்பதற்கான வெளிச்சம்
கிடைக்கத் தொடங்கும் இரவில்
கிழக்குச் சூரியன்



-ரேவா

Painting : Ethel Vrana

0 கருத்துகள்: