அவமானங்களுக்குப் பிறகும்
வருகிறாய்
அமைதியிழந்தது யாரென்று அறிய
அவசரகதியின் கட்டை விரல் நகம்
பெயர்ந்ததின் வலி
தாங்கித் தான் கூட்டி வரும்
கவலையை விடு
காலத்தின் காயத்தில்
மெளனத்தைக் கட்டும்
உடைந்து விட்ட நம்பிக்கைக்கு
செயற்கைக் கால்
எடையிழப்பு
மூச்சைத் திரட்டி நடந்திடும்
எண்ணத்தின் இடறல்
இழுத்துப் போகும் திசை
பரிசளிக்கும் செய்திக்குப் பின்
எடுத்துத் தருகிறாய்
அவமானத்தில் துளிர்த்த எனக்கான வெற்றியை
-ரேவா
(painting : Sonia Radtke )
0 கருத்துகள்:
கருத்துரையிடுக