எல்லாவற்றிலிருந்தும் விலகிக் கொள்ளும் படியான
சொற் பத்திரத்தை தட்டச்சாளர் வேகத்தில்
தயார் செய்கிறாய்
அடுக்க அடுக்க உட்கார்ந்து கொள்ளும்
வார்த்தைகளின் அர்த்தப் பிழை
அனுபவப் போதாமையின் அபத்த கணத்தை
ஆயுள் நீளத்துக்கு இழுத்துத் தர
செலவாகும் காலம்
பற்றாக்குறைப் பார்வையின் சூன்யமாய்
சரிபார்ப்புகளின் மேசைக்கு கைமாறும் ஒப்புதல்கள்
அவரவர் வழி திருத்தம் பெற்று
மாற்ற முடியாத படி
சார்பதிவாளரென்ற பிரிவின் கையெழுத்தில்
எழுதி வருகிறது
எல்லாவற்றிலிருந்தும் விலகிக் கொண்டதாய்
நீ நம்புவது
-ரேவா
( painting :Desgens )
சொற் பத்திரத்தை தட்டச்சாளர் வேகத்தில்
தயார் செய்கிறாய்
அடுக்க அடுக்க உட்கார்ந்து கொள்ளும்
வார்த்தைகளின் அர்த்தப் பிழை
அனுபவப் போதாமையின் அபத்த கணத்தை
ஆயுள் நீளத்துக்கு இழுத்துத் தர
செலவாகும் காலம்
பற்றாக்குறைப் பார்வையின் சூன்யமாய்
சரிபார்ப்புகளின் மேசைக்கு கைமாறும் ஒப்புதல்கள்
அவரவர் வழி திருத்தம் பெற்று
மாற்ற முடியாத படி
சார்பதிவாளரென்ற பிரிவின் கையெழுத்தில்
எழுதி வருகிறது
எல்லாவற்றிலிருந்தும் விலகிக் கொண்டதாய்
நீ நம்புவது
-ரேவா
( painting :Desgens )
0 கருத்துகள்:
கருத்துரையிடுக