உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

அகராதி அர்த்தம் இழக்கும் சொல்லின் ஆறு வார்த்தை



கவிதையைத் திறந்துவிடச் சொல்கின்ற
உன்னில்
கொலையின் தீவிரம்

மூன்று வார்த்தையில் இருக்கும் கொலைகாரன்
யாரென்று அறிய
நான்காவது வார்த்தைக்கு வருகிறாய்

புரியாத வார்த்தைக்குள் நொண்டியடிக்கும்
உன் அகராதி
அர்த்தமற்றுப் போகும் ஆறு வார்த்தையில்

கதறக்
கதற
வன்புணர்கிறாய்

இனி
கவிதையைத் திறந்துவிடச் சொல்வதின்
அவசியமற்று
யோனி விரிந்து கிடக்கிறது
சொற்களுக்கு

-ரேவா

Painting :chitra singh

( நன்றி :யாவரும்.காம் 1-06-14)

0 கருத்துகள்: