இதழ் பொருத்தி சூடேற்றிக்கொண்ட பின்
தனித்து விடப்படும் நிமிடங்கள்
குரூரமானவை
கைவிடப்பட்ட முத்தம்
காற்றில் கரைந்து வெறுமையாய் நீள
உள்ளுக்குள் தகிக்கும் வெப்பம்
உக்கிரமாய் எழுப்பும் அடிவயிற்று இரைச்சலாகி
சத்தமாய் பேசும் வெற்றுக்கோப்பையை
சலனமே இன்றி கழுவி வைக்கிறாய்
அடுத்த வேளை தேனீருக்காய்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக