ஓர் அழைப்பின் வழியே
பிடுங்கிப் போடுகிற தொடர்பு எல்லை
விடாது அழைத்தபடியே இருக்கிறது
கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையில்
பிழைத்திருக்கும் உணர்வு
நூலறுந்த பட்டமாகி
திசைவெளியெங்கும் அலையவிட்டுப் பார்க்கும்
காலத்தின் குரூர கண்களில்
ரத்த வெறி
உபயோகமற்ற எண்களின் உயிர்பிழைப்பு
உன்னிடம் நிகழாது போனதின்
சேகரிப்புக் குரல்
தினசரிகளில் ஒலித்த படியிருக்கிறது
அகாலத்தின் வெளிகளை அடைத்து
ஆணைக்கான அனைத்து உத்தரவுகளையும்
மீறி
அழைப்புக்கான சுதந்திரத்தின்
எல்லை தாண்டியதும் துண்டிக்கப்படுகிற
அலைவரிசை
அடுத்ததாய்
எடுத்துத் தரும் செய்தியோடு
தொலைந்துபோகிறது
வாழ்தல் குறித்தான
அத்தனை அனுமானமும்
-ரேவா
பிடுங்கிப் போடுகிற தொடர்பு எல்லை
விடாது அழைத்தபடியே இருக்கிறது
கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையில்
பிழைத்திருக்கும் உணர்வு
நூலறுந்த பட்டமாகி
திசைவெளியெங்கும் அலையவிட்டுப் பார்க்கும்
காலத்தின் குரூர கண்களில்
ரத்த வெறி
உபயோகமற்ற எண்களின் உயிர்பிழைப்பு
உன்னிடம் நிகழாது போனதின்
சேகரிப்புக் குரல்
தினசரிகளில் ஒலித்த படியிருக்கிறது
அகாலத்தின் வெளிகளை அடைத்து
ஆணைக்கான அனைத்து உத்தரவுகளையும்
மீறி
அழைப்புக்கான சுதந்திரத்தின்
எல்லை தாண்டியதும் துண்டிக்கப்படுகிற
அலைவரிசை
அடுத்ததாய்
எடுத்துத் தரும் செய்தியோடு
தொலைந்துபோகிறது
வாழ்தல் குறித்தான
அத்தனை அனுமானமும்
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக