உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

சூத்திரப் பிழைக்குள் தவறும் கணக்கின் சரிகள்

இந்த இரவு தீர்ந்துபோகும்
வெளிச்சத்தில்
ஒளித்து வைத்திருக்கிறாய் பார்வைக்கு பருகமுடியா
அடர் இருளை

நீ
கணித்துவைத்த கணக்குதானெனினும்
கால நேரத்தின் சூத்திரப் பிழை
சுழற்றி அடிக்கிறது
திசைக்கொன்றாய் இருக்கும் எல்லோரையும்

எல்லோர் திசைவழி பெய்யும் மழை
உன் வறண்ட வானிற்குள்
எதையும் கொடுத்திடாத போதும்

உன் விதை மணலில்/மனதில்
விழுந்த துளியாவோம்

தேவையெல்லாம்
உன் போல் நம்பிக்கையின் ஒற்றைப் புள்ளியில்
உருவாய் எழுந்து
கரம் கோர்க்கும் மனோபலம் தான்

0 கருத்துகள்: