உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 10 மே, 2015

மழை கிழிக்கும் கோடையின் வசந்தம்


காத்திருக்கத்தான் வேண்டுமென்ற கட்டளையில்
அழைத்து வருகிறாய் ஒரு மழைப் பொழுதை

வெயில் பொழுதின் தகிப்புக்கு
சிறுமழை ஆறுதலென்ற கோட்டைத் தாண்டி
அடித்துப் பெய்கிற மெளனத்தின் சுவர்களில்
வலிந்து இறங்குகிறாய்
வழியற்ற நேசத்தின் நிறத்தோடு

முடிவுறும் கணங்களின் நம்பிக்கை
சேர்த்திருக்கும் ஞாபகங்கள்
விட்டுக் கொடுத்தலின் வெறித்த வானை
தரிசிக்கத் தொடங்கையில்

வருகை குறித்த அறிவிப்பின் வழியாய்
கொண்டு வருகிறாய்
உன் கோடையை

***

-ரேவா


0 கருத்துகள்: