சொல்லியும் மாற்ற முடியாப் பழக்கத்தின்
அதி தீவிரம்
அவசர கால தடை உத்தரவு
வெறிச்சோடிக் கிடக்கும் சொல் வீதியில்
ஊறும் எறும்பொன்றைப் பற்றிய கரிசனங்களுக்கு இடமற்று
பெட்ரோல் குண்டுகளை வீசி
வேடிக்கை பார்ப்பதாக இருக்கின்ற
கோரிக்கை
அனுமதித்தலின் அதிகபட்ச சுதந்திரம்
செல்லாக் காசாகும் நடு இரவு
பொம்மலாட்ட கலைஞரின் விரல் நுனி
முடியும் வரை ஆடிப் பார்த்த காட்சி
பார்வையாளரற்ற அரங்கின்
பேய் கூச்சல்
தொடர முடியாதென்ற எண்ணத்தின் நூல்
நையும் படி
அரங்கேற்றிவிட்ட நாடகங்கள்
விந்து கருவாகும் கற்பவாசல் போராட்டம்
சுகப்பிரசவத்திற்கு வழியற்று
குருதி கிழித்து பிறக்கும் அழுகுரல்
சொல்லிக் கேட்காத பழக்கத்தின்
தையல் அவஸ்தை
-ரேவா
அதி தீவிரம்
அவசர கால தடை உத்தரவு
வெறிச்சோடிக் கிடக்கும் சொல் வீதியில்
ஊறும் எறும்பொன்றைப் பற்றிய கரிசனங்களுக்கு இடமற்று
பெட்ரோல் குண்டுகளை வீசி
வேடிக்கை பார்ப்பதாக இருக்கின்ற
கோரிக்கை
அனுமதித்தலின் அதிகபட்ச சுதந்திரம்
செல்லாக் காசாகும் நடு இரவு
பொம்மலாட்ட கலைஞரின் விரல் நுனி
முடியும் வரை ஆடிப் பார்த்த காட்சி
பார்வையாளரற்ற அரங்கின்
பேய் கூச்சல்
தொடர முடியாதென்ற எண்ணத்தின் நூல்
நையும் படி
அரங்கேற்றிவிட்ட நாடகங்கள்
விந்து கருவாகும் கற்பவாசல் போராட்டம்
சுகப்பிரசவத்திற்கு வழியற்று
குருதி கிழித்து பிறக்கும் அழுகுரல்
சொல்லிக் கேட்காத பழக்கத்தின்
தையல் அவஸ்தை
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக